ஆதரவற்ற ஆயிரம் பேருக்கு உணவளித்த "புட் பேங்க்" தன்னார்வலர் அமைப்பு

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புட் பேங்க் தன்னார்வ அமைப்பின் சார்பில் ஆதரவற்றோர், சாலையோரம் வசிக்கும் என ஆயிரம் நபர்களுக்கு இன்று வஉசி மைதானத்தில் மாபெரும் உணவு வழங்கும் திருவிழா நடைபெற்றது.



இதுகுறித்து "புட் பேங்க்" தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி பாலாஜி கூறுகையில், எங்களது இந்த புட் பேங்க் அமைப்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டு வருவதே இந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்படக் காரணம் ஆகும். ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.



இந்த அமைப்பின் மூலமாக மனநலம் குன்றியோர், சாலையோரம் வசிப்போர், ஆதரவற்றோர் என்றுள்ள மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான முழு உதவிகளும் புட் பேங்க் அமைப்பினால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, வஉசி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு குறித்து கடந்த ஒரு வாரத்திற்குமுன்பே முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் மூலம் ஆதரவற்ற, மனநலம் குன்றிய நபர்களைக் கண்டறிந்த மக்கள் அவர்களை வஉசி மைதானத்தில் திரளச் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, அவர்களுக்கு இன்று வெஜ் பிரியானி, முட்டை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், நாங்கள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் மக்களை புறக்கணிக்கிறோம். வேறு வழியின்றி, ஆதரவின்றி, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மக்களுக்கு மட்டுமே சேவையாற்றி வருகிறோம்.



அதுமட்டுமின்றி, இவ்வாறான மக்களில் பெண்களும் அதிகளவில் உள்ளனர். அவர்கள், சாலையோரம் ஆதரவின்றியும் எவ்வித பாதுகாப்புமின்றியும் தவித்து வருகின்றனர். இதில் மனநலம் குன்றிய பெண்களும் அடங்கும். எனவே, அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அரசுத் தரப்பில் கட்டப்பட்டுள்ள ஆதரவு இல்லங்களுக்கு பரிந்துரை செய்து வருகிறோம். மேலும், சிலரை அவர்களது குடும்பத்தினருடனும் இணைத்து வருகிறோம்.



சமீபத்தில், ஒரு நபர் ஆதரவின்றி சாலையில் பிச்சை எடுத்து சுற்றித்திரிந்து வந்தார். அவரை எங்களது குழுவினரால் மீட்டு பராமரித்து தற்போது, அவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரது உணவை அவரின் சொந்த ஊதியத்தில் உண்டு மகிழ்ந்து வருகிறார். இவ்வாறான ஆதரவற்றோர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதன் மூலம் புட் பேங்க் அமைப்பினர்களாகிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...